2021 புத்தாண்டு உடல் நலம் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி)

உடல் நலம்


ஜென்ம சனி மற்றும் ஜென்ம குரு நடைபெறுவதால், உங்களுக்கு தற்போது கடுமையான நேரம் நிலவலாம். இதனால் உங்கள் மன அழுத்தம் மற்றும் பதற்றம் அதிகரிக்கும். இதனால் பாகம் 1 மற்றும் 3-ல் உங்கள் உடல் நலம் பாதிக்கப்படலாம். உங்கள் உடல் நல பிரச்சனைகளை விட உங்களுக்கு உளவியல் ரீதியான பிரச்சனைகளே அதிகமாக இருக்கும். உங்களக்கு மகா தசை நடைபெற்றுக் கொண்டிருந்தால், இதனால் உங்களுக்கு மனக் கவலை மற்றும் பதற்றம் ஏற்பட்டு மேலும் இன்னல்களை சந்திப்பீர்கள். உங்கள் நெருங்கிய குடும்பத்தினர்களின் உடல் நலத்தின் மீது அதிக கவனம் தேவை. உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.
பாகம் 2 மற்றும் 4-ல் குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிற்கு பெயர்ந்து பலம் பெற்றதும், உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். சரியான மருந்து கிடைத்து விரைவில் குணமடைவீர்கள். நல்ல ஆலோசகர் கிடைத்து உங்களுக்கு மன ரீதியாக ஆறுதலான சூழல் உண்டாகும். கேது உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து நண்பர்கள் மூலம் உங்களுக்கு உதவி செய்வார். சுதர்சன மகா மந்திரம் கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும். மூச்சு பயிற்சி செய்து உங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.


முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021


நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021

Prev Topic

Next Topic