![]() | 2021 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | காதல் |
காதல்
இந்த 2021ஆம் ஆண்டு காதலர்கள் வலி மிகுந்த சம்பவங்களை சந்திப்பார்கள். பாகம் 1 மற்றும் 3-ல் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படலாம். குரு உங்கள் ஜென்ம ராசியிலும், ராகு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது உங்கள் காதல் வாழ்க்கைக்கு சாதகமற்ற சஞ்சாரமாகும். மூன்றாவது நபர் உங்களக்கும் நீங்கள் விரும்புபவருக்கும் இடையே வருவதால் வாக்குவாதங்கள் ஏற்படலாம். நீங்கள் அதிக உடைமையோடு நடந்து கொள்வதால், மன வலி மற்றும் மனக் கவலை ஏற்படலாம்.
உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் விரும்புபவரை விட்டு நீங்கள் பிரியவும் நேரலாம். நீங்கள் உங்கள் காதலை தெரிவிக்க முயற்சி செய்தால், உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் முன் நீங்கள் அவமானபப்டும் சூழல் ஏற்படலாம். உங்கள் நெருங்கிய நண்பரே உங்களை ஏமாற்றுவார். இது உங்களை பெரும் அளவு பாதிக்கும். நீங்கள் புதிதாக திருமணம் ஆன தம்பதியினர் என்றால், அன்யுனியம் குறைந்து உங்களுக்கு வலிமிகுந்த காலமாக இருக்கும். குழந்தை பேறுக்கு திட்டமிட இது ஏற்ற நேரம் இல்லை.
குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிற்கு பாகம் 2 மற்றும் 4-ல் பெயர்ந்ததும், நீங்கள் நல்ல மாற்றங்களை காண்பீர்கள். நவம்பர் 2௦, 2021 பாகம் 4 வரை காத்திருந்து அதன் பின்னர் புதிய உறவை தொடங்க முயற்சிப்பது நல்ல யோசனையாக இருக்கும். இந்த ஆண்டின் இறுதியில் நீங்கள் திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கலாம். திருமணம் ஆன தம்பதியினர் தங்களுக்கு இடையே இருக்கும் பிரச்சனைகளை சரி செய்து நவம்பர் 2௦, 2021க்கு மேல் நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தொடங்குவார்கள். உங்கள் வாழ்க்கையின் இந்த கடுமையான காலகட்டத்தை கடக்க ஒரு நல்ல ஆலோசகரின் உதவியைப் பெறுவது நல்லது.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021
Prev Topic
Next Topic