2021 புத்தாண்டு திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியலில் இருப்பவர்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி)

திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியலில் இருப்பவர்கள்


ஊடகத்துறை, கலைத்துறை, அரசியல் மற்றும் விளையாட்டில் இருப்பவர்களுக்கு இது சவால் நிறைந்த காலகட்டமாக இருக்கும். உங்களுக்கு எதிரான சதிகளால் நீங்கள் மிகவும் பாதிக்கப்படலாம். உங்கள் மறைமுக எதிரிகள் உங்கள் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் உங்களுக்கு தடைகளை உண்டாக்குவார்கள். உங்களுக்கு எதிராக யார் விளையாடுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கும். உங்கள் மீது தவறு இல்லை என்றாலும், நீங்கள் குற்றம் சாட்டபப்டுவீர்கள். சிறு தவறுகளால் நீங்கள் உங்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை இழக்க நேரலாம்.
உங்கள் படத்தை வெளியிடுவதில் உங்களுக்கு அதிக சவால்கள் உண்டாகும். அப்படியே அது வெளி வந்தாலும், தோல்வி அடைய நேரலாம். பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றப்படலாம். இணையதள வதந்திகள் மற்றும் உங்கள் உறவுகள் குறித்த வதந்திகள் உங்களுக்கு அவப்பெயரை உண்டாக்கக் கூடும். முக்கிய முடிவுகள் எடுக்கும் முன் உங்கள் பிறந்த சாதகத்தை பார்ப்பது நல்லது. நவம்பர் 2௦, 2021க்கு மேல் உங்கள் வாழ்க்கையில் நல்ல பலன்கள் உண்டாகத் தொடங்கும். மே 2021 வாக்கில் உங்களுக்கு சற்று நிவாரணம் கிடைத்தாலும், அது தற்காலிகமானதாகவே இருக்கும்.


முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021


நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021


Prev Topic

Next Topic