2021 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி)

ஏப்ரல் 05, 2021 முதல் ஜூன் 20, 2021 வரை நல்ல பலன்கள் (80 / 100)


குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிற்கு ஏப்ரல் 5, 2021 அன்று பெயர்ந்து உங்கள் வாழ்கையில் ஏற்பட்ட இறக்கங்களுக்கு சற்று இடைவேளை கொடுப்பார். உங்கள் உடல் நல பிரச்சனையின் மூல காரணத்தை கண்டறிவீர்கள். உங்கள் மருத்துவ செலவுகளை இன்சூரன்ஸ் மூலம் ஈடு செய்து விடலாம். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்யும் முயற்சியில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்கள் மனைவி/கணவன், குழந்தைகள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். சுப காரியங்கள் நடத்தலாம். ஆனால் திருமணம் மற்றும் குழந்தை பேறு போன்ற விடயங்களுக்கு நீங்கள் உங்கள் பிறந்த சாதகத்தின் பலத்தை சார்ந்து இருக்க வேண்டும்.
வேலை பளு குறையும். நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழந்திருந்தால், வேறு ஒரு வேலை இந்த காலகட்டத்தில் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் சம்பளமும், கிடைத்த பதவியும் குறைவாக இருந்தாலு, வரும் நாட்களில் சீரான வளர்ச்சியை காண்பீர்கள். தொழிலதிபர்கள் சில நிவாரணத்தை காண்பார்கள். சுய தொழில் புரிவோர்கள் நல்ல சன்மானம் கிடைப்பதால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். பங்கு சந்தை வர்த்தகம் உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் மட்டுமே உங்களுக்கு லாபத்தை தரும். நீங்கள் இன்னும் ஜென்ம சனி காலத்தில் தான் இருகின்றீர்கள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அதனால் தொடர்ந்து அழுத்தம் மற்றும் பதற்றம் ஏற்படும். இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொண்டு நீங்கள் அதிக சக்தியை பெற முயற்சிக்கலாம்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic