2021 புத்தாண்டு பயணம், வெளிநாட்டுப் பயணம் மற்றும் குடியேற்றம் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி)

பயணம், வெளிநாட்டுப் பயணம் மற்றும் குடியேற்றம்


இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொலைதூர பயணம் உங்களுக்கு அதிக பிரச்சனையை தரக்கூடியதாக இருக்கும். குறிப்பகா நீங்கள் தனிமையில் இருப்பதாலும், சரியான தங்கும் வசதிகள் இல்லாததாலுமே உங்களுக்கு பிரச்சனைகள் அதிகமாக இருக்கும். வெளிநாட்டில் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றப்படலாம். விசா மற்றும் குடியேற்றம் குறித்த விடயங்களில் பாகம் 1 மற்றும் 3-ல் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம்.
பாகம் இரண்டில் உங்களுக்கு சற்று நிவாரணம் கிடைக்கலாம். அனால், அது தற்காலிகமானதாகவும், குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்கும். நவம்பர் 2௦, 2021 வரை காத்திருந்தால், அதன் பின்னர் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். நீங்கள் இந்த ஆண்டு விசா ஸ்டம்பிங் செய்ய முயற்சித்தால் அதற்கு முன் உங்கள் பிறந்த சாதகத்தின் பலத்தை பார்க்க வேண்டும். ஏனென்றால் உங்கள் விசா குறித்த விடயங்கள் இந்த ஆண்டு நிராகரிக்கப்படலாம்.


முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021


நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021


Prev Topic

Next Topic