2021 புத்தாண்டு வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி)

வேலை / உத்தியோகம்


முக்கிய கிரகங்கள் சாதகமற்ற நிலையில் சஞ்சரிப்பதால், இந்த ஆண்டின் தொடக்கம் சிறப்பாக இல்லாமல் போகலாம். குரு மற்று சனி பகவான் இணைந்து உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து உங்கள் உத்தியோகத்தின் வளர்ச்சியை வெகுவாக பாதிப்பார்கள். அலுவலகத்தில் கடுமையான அரசியல் நிலவலாம். நீங்கள் 24/7 வேலை பார்த்தாலும், உங்கள் வேலையை முடிக்க முடியாமல் போகலாம், மேலும் உங்கள் மேலாளரை மகிழ்ச்சி அடையச் செய்ய முடியாமல் போகலாம். உங்கள் அலுவலகத்தில் நீங்கள் சில துன்புறுத்தல்களை சந்திப்பீர்கள். உங்கள் எச் ஆரிடம் நீங்கள் புகார் கூற முயற்சித்தால், அது உங்களுக்கு திரும்பி பிரச்சனையாகி விடலாம்.
உங்கள் மீது தவறு இல்லை என்றாலும், நீங்கள் குற்றம் சாட்டப்படலாம். பாகம் 1 மற்றும் 3-ல் யாரை பற்றியும் புகார் கூறுவதை தவிர்த்து விடுவது நல்லது. எந்த விதமான சட்ட பிரச்சனைகளையும் உங்களால் எதிர்த்து வெற்றி பெற முடியாமல் போகலாம். அலுவலகத்தில் உங்கள் எதிர்பார்புகளை குறைத்துக் கொண்டு உங்கள் வாழ்க்கையின் இந்த கடுமையான பாகத்தை நீங்கள் கடக்க முயற்சி செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால், எந்த வித பலனும் இன்றி உங்கள் உத்யோகத்தை நீங்கள் இழக்க நேரலாம்.
உங்களுக்கு இருக்கும் ஒரே நிவாரணம் என்னவென்றால், பாகம் 2 மற்றும் 4-ல் குரு நல்ல நிலைக்கு பெயர்ந்து உங்களுக்கு நல்ல நிவாரணத்தை தருவார். இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொண்டு நீங்கள் விடயங்களை மீண்டும் இயல்பு நிலைக்கு கொன்று வர முயற்சிக்கலாம். நீங்கள் உங்கள் உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்ற வளர்ச்சியை எதிர்பார்த்தால் அது இந்த ஆண்டின் இறுதியில் நவம்பர் 2௦, 2021க்கு மேல் நடக்கும். இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு ஏழரை சனி நடை பெறுவதால், உங்களுக்கு நேரம் சரியாக இல்லை என்பதை புரிந்து கொண்டு கவனமாக இருக்க வேண்டும். நவம்பர் 2021 வரை எந்த வளர்ச்சியையும் எதிர்பார்க்காமல் தற்போது இருக்கும் நிலையிலேயே உங்கள் உத்தியோகத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சிப்பது நல்லது.


முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021




Prev Topic

Next Topic