2021 புத்தாண்டு தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி)

தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்


தொழிலதிபர்களுக்கு இது ஒரு சவால் நிறைந்த காலகட்டமாக இருக்கும். நீங்கள் கவனமாக இல்லை என்றால், மற்றும் சரியான முடிவுகளை எடுக்கவில்லை என்றால், பல விடயங்கள் தவறாகப் போகலாம். சிறு தவறுகளாலும், மறைமுக எதிரிகள் உக்னலுக்கு செய்யும் சதிகளாலும், நீங்கள் உங்களுக்கு கிடைக்கவிருந்த நல்ல ப்ரோஜெக்ட்டுகளை இழக்க நேரலாம். உங்களுக்கு எதிராக யார் விளையாடுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியாமல் போகலாம். பண விடயங்களில் நீங்கள் மிகவும் நம்பியவரே உங்களை ஏமாற்றக் கூடும்.
உங்கள் வங்கிக் கடன் ஒப்புதல் பெறாமல் போகலாம். உங்களுக்கு கடன் கொடுத்தவர்கள் உங்களுக்கு கடனை திருப்பித் தருமாறும் அல்லது அதிக வட்டி விகிதத்தை கொடுக்குமாரும் உங்களுக்கு அதிக அழுத்தம் தரலாம். மேலும் மோசமான நிலையில், உங்கள் நிறுவனத்தை நீங்கள் இழக்க நேரலாம். உங்கள் கடனை திருப்பித் தர நீங்கள் உங்கள் சொத்துகளை விற்க நேரும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், 1 மற்றும் 3ஆம் பாகத்தில் உங்கள் வங்கிக் கணக்கு திவாலாகும் நிலை ஏற்படலாம்.
பாகம் 2-ல் உங்களுக்கு சற்று நிவாரணம் கிடைக்கும். ஆனால் அந்த அதிர்ஷ்டம் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே. பாகம் 3-ல் உங்களுக்கு சட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். உங்களுக்கு அவப்பெயர் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. நவம்பர் 2௦, 2021 வரை நீங்கள்கடுமையான சோதனை காலத்தில் இருப்பீர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த 2021ஆம் ஆண்டின் இறுதி முதல் விடயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.


முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021


நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021


Prev Topic

Next Topic