2021 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்


எதிர்பாராவிதமாக, இந்த 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விடயங்கள் சற்று மோசமாகவே இருக்கும். அஷ்டம சனி மற்றும் அஷ்டம குருவின் தாக்கத்தை ஒரே நேரத்தில் உணருவீர்கள். 1 மற்றும் 3ஆம் பாகத்தில் விடயங்கள் முற்றிலுமாக உங்கள் கட்டுப்பாட்டை மீறி நடக்கும். உங்கள் மனைவி/கணவன், குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் குடும்பத்தில் அதிகரிக்கும் பிரச்சனைகளால் உங்கள் மன நிம்மதி பாதிக்கப்படும். சுப காரியங்கள் நடத்த இது ஏற்ற நேரம் இல்லை. உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், பாகம் 1 மற்றும் பாகம் 3-ல் உங்களுக்கு அவப்பெயர் ஏற்படலாம்.
குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டிற்கு பெயருவதால் பாகம் 2 மற்றும் பாகம் 4-ல் உங்களால் உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காண முடியும். இந்த காலகட்டத்தை பயன்படுத்தி நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்க முயற்சிக்கலாம். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிப்பதில் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். நவம்பர் 2௦, 2021க்கு பிறகு நீங்கள் சுப காரியங்கள் நடத்த முயற்சிக்கலாம். இந்த 2021ஆம் ஆண்டின் இறுதி பகுதியில் உங்கள் குடும்பத்தில் குழந்தை பிறப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021


இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021




Prev Topic

Next Topic