![]() | 2021 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
2021 புத்தாண்டு பலன்கள் – மிதுன ராசி
இந்த 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவான் மற்றும் குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பார்கள். உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் நடக்கும் இரண்டு கிரகங்களும் இணைந்த இந்த சஞ்சாரம் உங்களுக்கு கசப்பான அனுபவங்களை உண்டாக்கக் கூடும். ராகு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிலும், கேது உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் நீங்கள் கலவையான பலன்களை எதிர்பார்க்கலாம்.
இந்த 2021 புத்தாண்டின் தொடக்கத்தில் நீங்கள் கடுமையான சோதனை காலத்தில் இருப்பீர்கள். ஏப்ரல் 5, 2021 வரை உங்களுக்கு எதிர்பாராத சாதகமற்ற செய்திகள் வரலாம் என்பதை நீங்கள் எதிர்பார்க்கலாம். ஏப்ரல் 5, 2021 முதல் ஜூன் 2௦, 2021 வரையிலான காலகட்டத்தில் (இரண்டாம் பாகத்தில்) விடயங்கள் சற்று அமைதியாகும். இந்த காலகட்டத்தில் குரு உங்கள் ராசியின் 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து விடயங்களை மீண்டும் இயல்பான நிலைக்கு கொண்டு வருவார்.
ஆனால் குரு ஜூன் 2௦, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரையிலான காலகட்டத்தில் வக்கிர கதி அடையும் போது நீங்கள் மீண்டும் சோதனை காலத்தில் இருப்பீர்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், இந்த காலகட்டத்தில் உங்களுக்கு அவப்பெயர் ஏற்படலாம். நீங்கள் எதை செய்தாலும், அதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றால், அதற்கு முன் தற்போது நடக்கும் உங்கள் மகா தசையின் பலத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டிற்கு நவம்பர் 2௦, 2021 அன்று பெயர்ந்த பிறகு, உங்கள் சோதனை காலம் ஒரு முடிவுக்கு வரும். இந்த 4ஆம் பாகத்தில், நவம்பர் 2௦, 2021 முதல் டிசம்பர் 31, 2021 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் எதை செய்தாலும் அதில் வெற்றிப் பெறுவீர்கள்.
அஷ்டம சனி நடை பெறுவதால் இந்த 2021ஆம் ஆண்டின் அனேக நேரங்கள் உங்களுக்கு சிறப்பாக இருக்காது. நீங்கள் உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு உங்கள் வாழ்க்கையின் இந்த கடுமையான காலகட்டத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021
Prev Topic
Next Topic