2021 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி)

ஏப்ரல் 05, 2021 முதல் ஜூன் 20, 2021 வரை நல்ல அதிர்ஷ்ட்டம் (85 / 100)


குரு உங்கள் ராசியின் 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலனைத் தருவார். ராகு மற்றும் கேது பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலனைத் தரும். அஷ்டம சனியின் தாக்கம் இந்த காலத்தில் குறைவாக இருக்கும். கடந்த காலத்தில் உங்களுக்கு ஏற்பட்ட வலி மிகுந்த சம்பவங்களில் இருந்து வெளி வருவீர்கள். உங்கள் மனோ பலத்தை நீங்கள் மீண்டும் பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் சரி செய்வீர்கள். இந்த குறிகிய காலத்தில் நீங்கள் சுப காரியங்கள் நடத்த திட்டமிடலாம். திருமணம் ஆன தம்பதியினர்களுக்கு திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழந்திருந்தால், உங்களுக்கு வேறு ஒரு வேலை வாய்ப்பு இந்த காலகட்டத்தில் கிடைக்கும். உங்கள் உத்தியோக வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தொழிலதிபர்கள் ஒரு நல்ல ஏற்றத்தை காண்பார்கள். உங்கள் போட்டியாளர்களை எதிர்த்து நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்கள் நிதி நிலையில் பெரும் அளவு முன்னேற்றம் ஏற்படும். உங்கள் கடன்களை நீங்கள் அடைப்பீர்கள். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், இந்த காலகட்டத்தில் நீங்கள் புது வீடு வாங்குவீர்கள்.


பயணம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். நிலுவையில் இருக்கும் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் ஒப்புதல் பெரும். பங்கு சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை தரும். ஆனால் ஸ்பெகுலேடிவ் வர்த்தகத்தை முடந்த வரை தவிர்த்து விடுவது நல்லது. ஜூன் 2௦, 2021 முதல் நீங்கள் மீண்டும் ஒரு சோதனை காலத்தில் இருப்பீர்கள்.


Prev Topic

Next Topic