![]() | 2021 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | மூன்றாம் பாகம் |
ஜூன் 20, 2021 முதல் நவம்பர் 20, 2021 வரை எதிர்பாராத பின்னடைவுகள் (30 / 100)
குரு வக்கிர கதி அடைந்து மீண்டும் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிற்கு பெயர்ந்து சனி பகவானோடு இணைந்து சஞ்சரிப்பார். அக்டோபர் 11, 2021 அன்று சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைவார், மேலும் குரு அக்டோபர் 18, 2021 அன்று வக்கிர நிவர்த்தி அடைவார். இந்த காலகட்டம் உங்கள் வாழ்க்கையில் மற்றுமொரு இழப்புகள் நிறைந்த காலகட்டமாக இருக்கும். விடயங்கள் மோசமாகி ஒரே இரவில் உங்களுக்கு எதிராக மாறும். இந்த காலகட்டங்களில் உங்களுக்கு துரோகங்கள் அதிகம் நடக்கும். உங்களுக்கு இந்த காலகட்டத்தில் எதிர்பாராத சாதகமற்ற விடயங்கள் நடக்கலாம்.
உங்கள் வாழ்க்கையில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது. உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்க மாட்டார்கள். இந்த் காலகட்டத்தில் உங்களுக்கு அவப்பெயரும், அவமானங்களும் ஏற்படலாம். உங்களுக்கு சட்ட பிரச்சனைகள் மற்றும் வருமானவரி பிரச்சனைகள் ஏற்படலாம். அரசியல் மற்றும் சதிகளால் உங்கள் உத்தியோக வாழ்க்கை பாத்க்கப்படலாம். தொழிலதிபர்கள் மோசமான காலகட்டத்தை காண்பார்கள். பண விடயங்களில் நீங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்படலாம். அதனால், இந்த காலகட்டத்தில் பணம் கடன் வாங்குவது அல்லது கடன் கொடுப்பது போன்றவற்றை தவிர்த்து விடுவது நல்லது. பங்கு சந்தை வர்த்தகத்தில் இருந்து முற்றிலுமாக விலகி இருப்பது நல்லது.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic