![]() | 2021 புத்தாண்டு வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
இந்த ஆண்டின் தொடக்கம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று மோசமாகவே உள்ளது. குரு மற்றும் சனி பகவான் இனைந்து உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் அதிக சவால்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் கடுமையான அரசியல் நிலவும். நீங்கள் 24/7 வேலை பார்த்தாலும், உங்களால் உங்கள் வேலைகளை சரியான நேரத்திற்கு முடிக்க முடியாமல் போகலாம், மேலும் உங்கள் மேலாளரையும் மகிழ்ச்சி அடைய செய்ய முடியாமல் போகலாம். அலுவலகத்தில் நீங்கள் துன்புறும் நிலையும் ஏற்படலாம். நீங்கள் உங்கள் எச் ஆரிடம் இத்தகைய துன்புருத்தளைப் பற்றி புகார் கூறினாலும், அது உங்களுக்கே பிரச்சனையாக மாறிவிடலாம்.
உங்கள் மீது தவறு இல்லை என்றாலும், நீங்கள் குற்றம் சாட்டப்படுவீர்கள். பாகம் 1 மற்றும் 3-ல் பிரச்சனைகளை தவிர்க்க முயற்சி செய்வது நல்ல யோசனையாக இருக்கும். உங்களால் உங்களுக்கு எதிரான சட்ட வழக்கில் வெற்றிப் பெற முடியாமல் போகலாம். அலுவலகத்தில் நீங்கள் உங்கள் எதிர்பார்புகளை குறைத்துக் கொண்டு, உங்கள் வாழ்க்கையின் இந்த கடுமையான காலகட்டத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால், எந்த பலனும் இல்லாமல் நீங்கள் உத்தியோகத்தில் இருந்து நீக்கப்படலாம்.
உங்குகு இருக்கும் ஒரே நிவாரணம் என்னவென்றால், பாகம் 2 மற்றும் 4-ல் குரு பகவான் நல்ல நிலையில் சஞ்சரிப்பது தான். இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொண்டு நீங்கள் விடயங்களை இயல்பு நிலைக்கு கொன்று வர முயற்சி செய்யலாம். நீங்கள் உங்கள் உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்ற வளர்ச்சியை எதிர்பார்கின்றீர்கள் என்றால் அது நவம்பர் 2௦, 2021க்கு மேல் கிடைக்கும் . சனி பகவான் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் இந்த ஆண்டு முழுவதும் சஞ்சரிப்பதால் நீங்கள் உங்களுக்கு நேரம் இப்போது சரி இல்லை என்பதை புரிந்து கொண்டு கவனமாக இருக்க வேண்டும். இது நீங்கள் தற்போது இருக்கும் நிலையிலே உங்கள் உத்தியோகத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நேரம். நோவேமேப்ர் 2021 வரை எந்த வளர்ச்சியையும் எதிர்பார்க்க முடியாது.
Prev Topic
Next Topic