![]() | 2021 புத்தாண்டு தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் |
தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்
தொழிலதிபர்கள் நீண்ட கால குறிக்கோள்கள் மற்றும் இலக்கை நோக்கி சிறப்பாக செயல்படுவார்கள். இருப்பினும், விடயங்கள் இந்த 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சிறப்பாக இல்லாமல் போகலாம். உங்கள் போட்டியாளர்களிடம் இருந்து உங்களுக்கு அதிக அழுத்தம் நிறைந்த சூழல் ஏற்படலாம். உங்கள் மறைமுக எதிரிகள் உங்கள் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் சதிகளை செய்வார்கள். ஆனால் சனி பகவான் இந்த 2021 ஆண்டு நல்ல நிலையில் சஞ்சரிப்பதால் எதிரிகளின் திட்டத்தை செயல் இழக்க செய்வார்.
ஏப்ரல் 5, 2021 முதல் ஜூன் 2௦, 2021 வரையிலான காலகட்டத்தில் இரண்டாம் பாகத்தில் தடைகளில் இருந்து வெளி வந்து, பெரும் அளவு வெற்றிகளைப் பெறுவீர்கள்/ அதிகரிக்கும் லாபத்தால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் லாபத்தை பணமாக்கி, அதனை உங்கள் சேமிப்பு கணக்கில் போட்டு வைத்துக் கொள்வது நல்ல யோசனையாக இருக்கும். பாகம் 3-ல் குரு வக்கிர கதி அடைந்ததும் மீண்டும் ஒரு பின்னடைவு ஏற்படும்.
நவம்பர் 2௦, 2021 வாக்கில் உங்களுக்கு ஒரு நல்ல முன்னேற்றம் மீண்டும் ஏற்படும். உங்கள் வங்கிக் கடன்கள் எந்த சிக்கலும் இன்றி ஒப்புதல் பெரும். உங்கள் தொழிலை விரிவுபடுத்த இது நல்ல நேரம். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் ஒரு தொடக்க நிலை தொழிலை எடுத்து செய்வீர்கள். ஒரே இரவில் நீங்கள் பணக்காரராகவும் ஆகலாம். ரியல் எஸ்டேட் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் தங்களுக்கு நிதி சன்மானங்கள் கிடைப்பதால் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021
Prev Topic
Next Topic