![]() | 2021 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
ராகு மற்றும் கேதுவிடம் இருந்து உங்களால் நல்ல பலனை எதிர்பார்க்க முடியாது. குரு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் குடும்பத்தில் நடக்கும் அரசியலை அதிகரிப்பார். உங்கள் மனைவி/கணவன் மற்றும் குடும்பத்தினர்களுடன் உங்களுக்கு தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். உங்கள் குழந்தைகள் உங்களிடம் புதிய தேவைகளை முன் வைத்து உங்களை ஆச்சரியபடுத்துவார்கள். குடும்பத்தில் அதிகரிக்கும் பிரச்சனைகளால் உங்கள் மன நிம்மதி பாதிக்கக் கூடும்.
ஏப்ரல் 5, 2021 வரை உங்களால் இந்த கடுமையான சூழலை சமாளித்து விட முடியும் என்றால், அதன் பிறகு இரண்டாம் பாகத்தில் குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிற்கு பெயர்ந்த பின் சிறப்பான நிவாரணம் கிடைக்கும். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது நல்ல நேரம். சுப காரியங்கள் நடத்துவதில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
3ஆம் பாகத்தில் குரு வக்கிர கதி அடைந்து மீண்டும் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிற்கு பெயருவதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் மறைமுக எதிரிகளால் உங்களுக்கு எதிரான சதிகள் நடக்கும். எந்த ஒரு முக்கிய முடுவ்கள் எடுக்கும் முன்பும் நீங்கள் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து பின்னர் செயல்பட வேண்டும். சனி பகவான் நல்ல நிலையில் சஞ்சரித்து விடயங்கள் விடயங்கள் உங்கள் கட்டுப்பாட்டை மீறி நடக்காமல் பார்த்துக் கொள்வார்.
நான்காம் பாகத்தில் குரு முன்னோக்கி உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிற்கு பெயரும் போது, உங்களுக்கு சிறப்பான பலன்கள் நடக்கத் தொடங்கும். உங்கள் மறைமுக எதிரிகள் யார் என்பதை நீங்கள் அறிந்து, அவர்களை விட்டு விலகி விடுவீர்கள். உங்கள் மனைவி/கணவன் உங்கள் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள். உங்கள் சமூக வட்டாரத்தில் உங்களுக்கு நன்மதிப்பு அதிகரிக்கும்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021
Prev Topic
Next Topic