2021 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி)

நவம்பர் 20, 2021 முதல் டிசம்பர் 31, 2021 வரை விண்ணைத் தொடும் லாபம் (90 / 100)


இந்த பாகத்தில் உங்களுக்கு நல்ல செல்வங்கள் சேரும். குரு மற்றும் சனி பகவான் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். நீங்கள் எதை செய்தாலும், அது உங்களுக்கு பெரும் அளவு வெற்றியைத் தரும். உங்கள் உடல் நலம் சிறப்பாக இருக்கும். உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் நேரம் செலவிடுவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சுப காரியங்கள் நடத்த இது சிறப்பான நேரம். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வருவார்கள். இது உங்களை பெருமை அடையச் செய்யும்.
இந்த பாகத்தில் உங்கள் உத்தியோகத்தில் வளர்ச்சி ஏற்படுவதால் நீங்கள் சிறப்பான பலனைப் பெறுவீர்கள். குறைந்த முயற்சியிலேயே நீங்கள் அடுத்த நிலைக்கு பதவி உயர்வைப் பெறுவீர்கள். பெரிய நிறுவனத்தில் இருந்து சிறப்பான சம்பளத்தோடு உங்களுக்கு புது வேலை வாய்ப்பும் கிடைக்கும். அலுவலகத்தில் எ௫ந்த அரசியலும் இருக்காது. உயர் நிர்வாகத்தினருடன் நீங்கள் நெருக்கமாவீர்கள். அலுவலகத்தில் உஞளுக்கு பாராட்டுகள் கிடைக்கும். தொழிலதிபர்கள் இந்த பாகத்தில் நல்ல அதிர்ஷ்டம் கிடைப்பதால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்கள் தொழிலில் நீங்கள் நல்ல விண்ணைத் தொடும் லாபத்தை காண்பீர்கள். உங்கள் தொழிலுக்கு ஒரு நல்ல சலுகை கிடைத்தாலும் அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.


தொலைதூர பயணம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும். நிலுவையில் இருக்கும் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் எந்த தாமதமும் இன்றி ஒப்புதல் பெரும். பங்கு சந்தை வர்த்தகம் உங்களுக்கு நல்ல வெற்றியைத் தரும். அதிர்ஷ்ட சீட்டு, மற்றும் சூதாட்டம் போன்றவை உங்களக்கு நல்ல அதிர்ஷ்டம் தரும். புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம்.


Prev Topic

Next Topic