![]() | 2021 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | காதல் |
காதல்
நீங்கள் யாரையாவது விரும்புகிறீர்கள் என்றால், உங்களுக்கு உயர்வு, இறக்கம் என்ற இரண்டு பலன்களும் கலவையாக இந்த ஆண்டு உண்டாகும்.
பாகம் 1 மற்றும் 3-ல் நீங்கள் விரும்புபவருடன் உங்களுக்கு கடுமையான சண்டைகள் ஏற்படலாம். இதனால் நீங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவீர்கள். உங்கள் காதல் விடயத்தால் இரு குடும்பத்தினர்களுக்கும் இடையே சண்டைகள் ஏற்படலாம். திருமணம் ஆன தம்பதியினர்களுக்கு இது கடுமையான நேரமாக இருக்கும். நீங்கள் ஆணாக இருந்தால், குழந்தை பேறுக்கு திட்டமிடலாம். நீங்கள் பெண்ணாக இருந்தால், உங்கள் உடல் நலத்தின் மீது ஏப்ரல் 5, 2021 வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஆனால் விடயங்கள் பாகம் 2 மற்றும் 4-ல் இலகுவாகும். குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிற்கு பெயர்ந்து நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். சனி பகவானும் இந்த ஆண்டு முழுவதும் நல்ல நிலையில் சஞ்சரிப்பார். இந்த சஞ்சாரத்தால் பாகம் 2 மற்றும் 4-ல் உங்கள் அதிர்ஷ்டம் பல மடங்கு அதிகரிக்கும். உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் ஒப்புதல் தருவார்கள். திருமணம் ஆன தம்பதியினர் நல்ல அன்யுனியதோடு இருப்பார்கள். பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணத்தில் நீங்கள் ஆர்வம் காட்டுவீர்கள். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், ஏப்ரல் 5, 2021க்கு பிறகு உங்களுக்கு ஏற்ற வரன் கிடைக்கும்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021
Prev Topic
Next Topic