![]() | 2021 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
2021 புத்தாண்டு பலன்கள் – சிம்ம ராசி
இந்த புத்தாண்டின் தொடக்கத்தில் ராகு உங்கள் ராசியின் 10ஆம் வீட்டிலும், கேது 4ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பார்கள். உங்களால் இந்த சர்ப்ப கிரகங்களிடம் இருந்து எந்த பலனையும் இந்த ஆண்டு எதிர்பார்க்க முடியாது. சனி பகவான் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பது நல்ல செய்தியாகும். சனி பகவான் உங்களுக்கு பாதுகாப்பாக இருந்து, உங்கள் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்.
குரு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து அதிக சவால்களை இந்த ஆண்டின் தொடக்கத்தில் தருவார். ஏப்ரல் 5, 2021 வரை உடல் நல பிரச்சனைகளும், நிதி பிரச்சனைகளும் ஏற்படலாம். குரு உங்கள் ராசியின் களத்திற ஸ்தானத்திற்கு பெயர்ந்த பிறகு இரண்டாம் பாகத்தில் ஏப்ரல் 5, 2021 முதல் ஜூன் 2௦, 2021 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும்.
3ஆம் பாகத்தில் ஜூன் 2௦, 2021 முதல் நவம்பர் 2., 2021 வரையிலான காலகட்டத்தில் குரு வக்கிர கதி அடைந்து மீண்டும் 6ஆம் வீட்டிற்கு பெயர்ந்த பிறகு உங்களுக்கு பின்னடைவுகள் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் நீங்கள் எந்த முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றாலும், ஒருமுறைக்கு இரண்டு முறை சிந்தித்து பின் செயல்பட வேண்டும்.
நவம்பர் 2௦. 2021க்கு மேல் இறுதி பாகத்தில் சனி பகவான் மற்றும் குரு ஆகிய இரண்டு கிரகங்களும் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மொத்தத்தில் உங்களுக்கு நல்ல மற்றும் சாதகமற்ற இரண்டு கலவையான பலன்களும் கிடைக்கும். ஆனால் சனி பகவானின் பலத்தால், நல்ல பலன்கள் சாதகமற்ற பலன்களை விட அதிகமாகவே இருக்கும். மூச்சு பயிற்சி செய்து நீங்கள் நேர்மறை சக்திகளை அதிகரித்துக் கொள்ள முயற்சிக்கலாம்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021
Prev Topic
Next Topic