2021 புத்தாண்டு திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி)

திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள்


திரைநட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகத்தர்கள் மற்றும் அரசியலில் இருப்பவர்கள் சீரான வளர்ச்சி மற்றும் வெற்றியை நீண்ட கால அடிப்படையில் பல ப்ரோஜெக்ட்டுகள் மூலம் காண்பார்கள். ஆனால், பாகம் 1 மற்றும் 3ல் உங்களுக்கு குறுகிய காலத்திற்கு பின்னடைவுகள் ஏற்படலாம். நிதி பிரச்சனைகள் மற்றும் உங்களுடன் வேலை பார்ப்பவர்களுடன் ஏற்படும் சண்டைகளால் விடயங்கள் தேக்க நிலை அடையலாம். உங்கள் படத்தை இந்த காலகட்டத்தில் வெளியிடுவது நல்ல யோசனையாக இருக்காது. அப்படியே அது தாமதமானாலும், அது நல்லதுக்கே நடக்கின்றது.
பாகம் 2 மற்றும் 4-ல் குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் பலம் பெறுவதால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் ஏற்படும். உங்களுக்கு கிடைக்கும் புகழ் மற்றும் அதிகரிக்கும் ரசிகர்களால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் நல்ல உற்சாகத்தோடு இருப்பதால் ஊடகங்களும், மக்களும் உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். அதிகரிக்கும் நிதி சன்மானன்களால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொண்டு நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செட்டிலாக முயற்சி செய்ய வேண்டும்.


முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021


நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021


Prev Topic

Next Topic