2021 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Simma Rasi (சிம்ம ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடுகள்


இந்த 2021ஆம் ஆண்டு பங்கு சந்தை வர்த்தகத்தில் நீண்ட கால முதலீடுகள் செய்பவர்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். லாபம் மற்றும் நட்டத்திற்கு இடையே நீங்கள் ஒரு ரோலர் கோஸ்டர் பயணத்தை காண்பீர்கள். பாகம் 1 மற்றும் 3-ல் குரு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் போது நீங்கள் பண இழப்பை சந்திப்பீர்கள். வர்த்தகத்தை நீங்கள் முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும். இல்லை என்றால், நீங்கள் பாதுகாப்பாக இழப்பில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
பாகம் 2 மற்றும் 4-ல் குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதன் பலத்தால் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். குறிப்பிடத்தக்க லாபத்தை நீங்கள் பெறுவீர்கள். ஆப்சன், ப்யூச்சர், மற்றும் கமாடிட்டீஸ் போன்ற வர்த்தகத்தில் நல்ல லாபத்தை பார்க்கலாம். சனி பகவான் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் அதிர்ஷ்டத்தை பல மடங்கு அதிகரிக்கச் செய்வார். பாகம் 2 மற்றும் 4-ல் அதிர்ஷ்ட சீட்டு மற்றும் சூதாட்டம் போன்றவற்றை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.


முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021


நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021


Prev Topic

Next Topic