2021 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்


சனி பகவான் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிலும், ராகு 8ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்கள் குடும்பத்தினர்களுடன் உங்களுக்கு இருக்கும் உறவை பாதிப்பார்கள். திருமணம் ஆன தம்பதியினர்கள் சில மாத காலம், உத்தியோகம் அல்லது பயணம் போன்ற காரணங்களால் பாகம் 1 மற்றும் 3-ல் தற்காலிகமாக பிரிந்திருக்க நேரலாம். உங்கள் பிறந்த சாதகத்தின் பலன் இல்லாமல் குழந்தை பேறுக்கு திட்டமிடுவதை தவிர்த்து விடுவது நல்லது. வயதான பெற்றோர்களை பார்த்துக் கொள்வதில் சில சிக்கல்கள் ஏற்படலாம். பாகம் 1 நாற்றும் 3-ல் சுப காரியங்கள் நடத்துவதை தவிர்த்து விடுவது நல்லது.
குரு உங்கள் ராசியின் 5ஆம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்திற்கு பாகம் 2 மற்றும் 4-ல் பெயர்ந்ததும் நீங்கள் நல்ல மாற்றங்களை காணத் தொடங்குவீர்கள். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக சரி செய்வீர்கள். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது நல்ல நேரம். சுப காரியங்கள் நடத்த இது நல்ல நேரம். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரையும், புகழையும் பெரும்.


முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021


நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021


Prev Topic

Next Topic