|  | 2021 புத்தாண்டு நிதி / பணம்  ராசி பலன்கள் Rasi Palangal  -  Thula Rasi (துலா ராசி) | 
| துலா ராசி | நிதி / பணம் | 
நிதி / பணம்
இந்த 2021ஆம் ஆண்டு உங்கள் நிதி நிலையில் நீங்கள் கலவையான அதிர்ஷ்டத்தை காண்பீர்கள். சனி பகவான் மற்றும் ராகு உங்களுக்கு அதிக செலவுகளை உண்டாக்கினாலும், குரு உங்கள் பண வரத்தை அதிகரித்து உங்கள் செலவுகளை சமாளிக்க உதவுவார். பாகம் 1 மற்றும் 3-ல் உங்கள் நிதி நிலை பாதிக்கப்படலாம். உங்கள் மாதாந்திர நிதித் தேவைகள் கடந்த சில மாதங்களாகவே அதிகரித்துக் கொண்டிருக்கும். உங்கள் வருமானம் அர்தஷ்டம சனியால் உங்கள் வருமானம் பாதிக்கப்படலாம். உங்கள் நிதித் தேவைகளை சமாளிக்க நீங்கள் பண வரத்தை உண்டாக்க முயற்சி செய்ய வேண்டும். உங்கள் வங்கிக் கடன்கள் அதிக வட்டி விகிதத்திற்கு ஒப்புதல் பெரும். உங்கள் வீட்டிற்கு அடிக்கடி விருந்தினர்கள் வருகைத் தருவார்கள். உங்கள் செலவுகள் இதனால் மேலும் அதிகரிக்கும். 
குரு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சாதகமான நிலையில் சஞ்சரிப்பதால் பாகம் 2 மற்றும் 4-ல் உங்கள் நிதி பிரச்சனைகள் குறையும். உங்கள் சொத்துக்களை விற்று கடனை அடைத்து விட இது நல்ல நேரம். உங்கள் கடனை நிதி மறுபரிசீலனை செய்யும் முயற்சியில் நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள். இதனால் உங்கள் கிரெடிட் மதிப்பு அதிகரிக்கும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் புது வீடு வாங்கி குடி பெயரவும் முயற்சிக்காலாம். 
சிறப்பு குறிப்பு: நீங்கள் இந்த 2021ஆம் ஆண்டு புதிதாக வீடு கட்டத் தொடங்க உள்ளீர்கள் என்றால், அதற்கு உங்கள் மகா தசை சாதகமாக உள்ளதா என்று பார்க்க வேண்டும். அப்படி இல்லை என்றால், குரு நல்ல நிலையில் சஞ்சரித்தாலும் உங்கள் கட்டுமான நிபுணர் அல்லது தரகரால் நீங்கள் ஏமாற்றப்படலாம். 
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்:  ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021
Prev Topic
Next Topic


















