2021 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி)

நவம்பர் 20, 2020 முதல் ஏப்ரல் 05, 2021 மிதமான நிவாரணம் (50 / 100)


சனி பகவான், ராகு மற்றும் கேதுவிடம் இருந்து உங்களால் நல்ல பலனை எதிர்பார்க்க முடியாது. ஆனால் குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் பிரச்சனைகளின் தாக்கத்தை குறைக்க உதவுவார். உங்கள் உடல்நல பிரச்சனைகள் சரியான மருந்து கிடைத்து குறையும். உங்கள் குடும்பத்தினர்கள் உங்களுக்கு நல்ல உறுதுணையாக இருப்பார்கள். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கலாம். ஆனால், சுப காரியங்கள் நடத்தும் போது அதிக அழுத்தம் நிறைந்த சூழல் நிலவலாம்.
அலுவலகத்தில் நல்ல நிவாரணம் பெறுவீர்கள். உயர் பதவியில் இருப்பவர்கள் உங்களை மோசமான சூழ்நிலையில் இருந்து வெளியில் கொண்டு வர உதவி செய்வார்கள். உங்கள் வேலை பளு மற்றும் பதற்றம் குறையும். உங்கள் குடும்பத்தினர்களுடன் நேரம் செலவிட உங்களுக்கு போதிய நேரம் கிடைக்கும். இருப்பினும், உத்தியோகத்தில் வளர்ச்சியை எதிர்பார்க்கவோ அல்லது புது வேலை வாய்ப்பிற்கு முயற்சிக்கவோ இது ஏற்ற நேரம் இல்லை. தொழிலதிபர்களுக்கு சில நிவாரணம் கிடைக்கும். ஆனால் புது ப்ராஜெக்ட் வர மேலும் சில காலம் ஆகலாம்.


பயணம் உங்களுக்கு கலவையான பலன்களைத் தரும். உங்கள் நிதி நிலை சற்று ஆறுதல் தரும் வகையில் இருக்கும். உங்கள் வங்கிக் கடன் ஒப்புதல் பெரும். உங்கள் செலவுகள் குறையும். அதனால் உங்கள் கடன்களை நீங்கள் அடைக்கத் தொடங்குவீர்கள். இருப்பினும், நீங்கள் பங்கு சந்தை வர்த்தகத்தை விட்டு முற்றிலுமாக விலகி இருப்பது நல்லது/ உங்கள் சொத்துக்களை விற்று, பண வரத்தை உண்டாக்கி, நீங்கள் கடனை அடைக்க முயற்சிக்கலாம். ஆனால், இந்த பாக காலகட்டத்தில் புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியை தவிர்த்து விடுவது நல்லது.


Prev Topic

Next Topic