![]() | 2021 புத்தாண்டு உடல் நலம் ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | உடல் நலம் |
உடல் நலம்
சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியை பார்வை இடுவதால் உங்களுக்கு இந்த 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உடல் உபாதைகள் உண்டாகும். ஜீரணம், வயிறு அல்லது கல்லீரல் போன்றவற்றில் பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் பெற்றோர்களின் உடல் நலம் பாதிக்கப்படலாம் என்பதால் அவர்களின் உடல் நலத்தின் மீது கவனம் தேவை. சனி / புதன் அந்தர்தசை நடைபெருபவர்களுக்கு சரும பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால், பாகம் 1-ல்குரு சனி பகவானோடு இணைந்து உங்களுக்கு சரியான மருந்து கிடைத்து விரைவாக குணமடைய உதவி செய்வார்.
பாகம் 2-ல் நீங்கள் அறுவைசிகிச்சை செய்து கொள்ள முயற்சிப்பது நல்ல யோசனையாக இருக்கும். இதனால் விரைவாக குணமடையலாம். உங்கள் உடல் நிலை பாகம் 3-ல் சுமாராகவே இருக்கும். நவம்பர் 2௦, 2021க்கு மேல் இறுதி பாகத்தை நீங்கள் அடைந்ததும் குரு உங்கள் ராசியின் பூர்வ புண்ய ஸ்தானத்தில் முழு பலம் பெற்று நல்ல அதிர்ஷ்டத்தை உங்களுக்குத் தருவார். ஹனுமான் சாலிசா கேட்டு உங்கள் உடல் நல பிரச்சனைகளின் தாக்கத்தை குறைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். போதிய மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்ளுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021
Prev Topic
Next Topic