2021 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி)

கண்ணோட்டம்


2021 புத்தாண்டு பலன்கள் – துலாம் ராசி
இந்த 2021 புத்தாண்டின் தொடக்கத்தில் சனி பகவான் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிலும், ராகு 8ஆம் வீட்டிலும் மற்றும் கேது 2ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பார்கள். சனி பகவான் உங்கள் ராசியின் அர்தஷ்டம ஸ்தானத்தில் இந்த ஆண்டு முழுவதும் சஞ்சரிப்பது ஒரு பலவீனமான விடயமாகும். இதனால் நீங்கள் அதிக சவால்களையும், கசப்பான அனுபவங்களையும் சந்திப்பீர்கள். ஆனால் உங்களுக்கு நல்ல செய்தி என்னவென்றால், குரு நல்ல இடத்தில் சஞ்சரித்து அர்தஷ்டம சனியின் தாக்கத்தில் இருந்து உங்களை பாதுகாப்பார்.
குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட வலி மிகுந்த சம்பவங்களில் இருந்து உங்களை வெளிவரச் செய்ய உதவுவார். பாகம் 1-ல் உங்களுக்கு கலவையான பலன்கள் உண்டாகும். ஆனால் பாகம் இரண்டை அடைந்ததும், குரு 7 ஆண்டுகளுக்கு பிறகு உங்கள் ஜென்ம ராசியை பார்வை இடுவார். இதனால் ஏப்ரல், மே மற்றும் ஜூன் 2021 ஆகிய மாதங்களில் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும்.
குரு வக்கிர கதி அடைந்து மீண்டும் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிற்கு பெயர்ந்து பாகம் 3-ல், ஜூன் 2௦, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு பின்னடைவுகளை உண்டாக்குவார். நவம்பர் 2௦, 2021 வரை உங்களுக்கு விடயங்கள் மெதுவாகவே நகரும். நவம்பர் 2௦, 2021க்கு மேல் இறுதி பகுதில் இருந்து நீங்கள் நல்ல மாற்றங்களை காண்பீர்கள்.


சனி பகவான் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து தொடர்ச்சியாக உங்களுக்கு அழுத்தம் மற்றும் பதற்றத்தை உண்டாக்குவார். பாகம் 2 மற்றும் 4-ல் நல்ல பலனைப் பெறுவீர்கள். உங்களுக்கு நேரம் நன்றாக உள்ள போது நீங்கள் இந்த காலத்தை பயன்படுத்திக் கொண்டு முக்கிய முடிவுகள் எடுத்து பாதுகாப்பாக செயல்பட முயற்சிக்க வேண்டும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், அர்தஷ்டம சனி நடை பெறுவதால், அதில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள இந்த ஆண்டு முழுவதும் பங்கு சந்தை வர்த்தகத்தில் இருந்து விலகி இருப்பது நல்லது.

முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021


மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021


Prev Topic

Next Topic