![]() | 2021 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | இரண்டாம் பாகம் |
ஏப்ரல் 05, 2021 ஜூன் 20, 2021 வரை நல்ல அதிர்ஷ்டம் (85 / 100)
குரு உங்கள் ஜென்ம ராசியை 7 ஆண்டுகளுக்கு பிறகு பார்வை இடுகிறார். இது உங்களுக்கு ஒரு நல்ல செய்தியாகும். முக்கிய முடிவுகள் எடுக்க நீங்கள் இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சியிப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் குடும்பத்தில் குழந்தை பிறப்பதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். காதலர்கள் நீண்ட காலத்திற்கு பிறகு காதல் வாழ்க்கையில் நல்ல நேரத்தை காண்பார்கள். திருமணம் ஆன தம்பதியினர் நல்ல அன்யுனியதோடு இருப்பார்கள். ஆனால் குழந்தை பேறுக்கு திட்டமிடுகிறீர்கள் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதகத்தை சார்ந்தே முடிவெடுக்க வேண்டும்.
நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழந்திருந்தால், உங்களுக்கு இந்த காலகட்டத்தில் நலல் வேலை வைப்பு கிடைக்கும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், அடுத்த நிலைக்கு உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்களுக்கு நிதி சன்மானங்கள் கிடைப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். தொழிலதிபர்கள் நீண்ட காலத்திற்கு பிறகு நல்ல மாற்றங்களை காண்பார்கள். உங்கள் தொழிலை விரிவுபடுத்துவதை விட, நிர்வாக செலவுகளை குறைக்கக முயற்சி செய்வது நல்லது.
உங்கள் நிதி நிலையில் இந்த பாக காலகட்டத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். பண வரத்து பல வழிகளில் இருந்தும் வரும். உங்கள் கடன்களை விரைவாக அடைப்பீர்கள். உங்கள் வங்கிக் கடன் ஒப்புதல் பெரும். பங்கு சந்தை வர்த்தகத்தில் கூட உங்களுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். நிலுவையில் இருக்கும் குடியேற்றம் மற்றும் விசா குறித்த விடயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டுப் பயணம் செய்ய வாய்ப்புகள் கிடைக்கும்.
Prev Topic
Next Topic