![]() | 2021 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | மூன்றாம் பாகம் |
ஜூன் 20, 2021 முதல் நவம்பர் 20, 2021 வரை அதிக சவால்கள் (40 / 100)
குரு வக்கிர கதி அடைந்து மீண்டும் உங்கள் ராசியின் 4ஆம் பாகத்திற்கு பெயருவார். எதிர்பாராவிதமாக இதனால் மீண்டும் அர்தஷ்டம சனியின் தாக்கம் அதிகரிக்கும். கடந்த மாதங்களில் உங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் தற்போது கிடைக்காது. எதிர்பாராத பின்னடைவுகள் ஏற்படலாம். உங்கள் உடல் நலம் இந்த பாக காலகட்டத்தில் மிக மோசமாக பாதிக்கப்படலாம். உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். மறைமுக குடும்ப அரசியல் மற்றும் சதிகளைப் பற்றி உங்களுக்குத் தெரிய வரும்.
குறிப்பாக அக்டோபர் 2021 வாக்கில் நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழக்கும் சூழல் ஏற்படலாம். இந்த சோதனை காலத்தை கடக்கும் வரையில் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். தொழிலதிபர்களுக்கு நிதி இழப்புகள் ஏற்படலாம். உங்கள் பங்குதாரருடன் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். வருமான வரி போன்ற சட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். சிறு விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், பயணம் செய்வதை முடிந்த வரை தவிர்த்து விடுவது நல்லது. புது வாகனம் வாங்குவதை இந்த காலகட்டத்தில் தவிர்த்து விடுவது நல்லது. உங்கள் விசா அந்தஸ்த்து நீங்கள் இழக்க நேரலாம், மேலும் குடியேற்ற பலன்கள் நிராகரிக்கப்படலாம். உங்கள் தாய்நாட்டிற்கு நீங்கள் திரும்ப கட்டாயப்படுத்தப்படுவீர்கள்.
பங்கு சந்தை வர்த்தகத்தை முற்றிலுமாக தவிர்த்து விடுவது நல்லது. ன்கள் வீட்டில் குடி இருப்பவர்களிடம் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். நீங்கள் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் ஒப்பந்தம் அல்லது பண பிரச்சனையால் நிறுத்தப்படலாம். நீங்கள் பொறுமையாக இருந்து உங்கள் வாழ்க்கையின் இந்த கடுமையான காலகட்டத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும்.
Prev Topic
Next Topic