![]() | 2021 புத்தாண்டு பயணம் மற்றும் குடியேற்ற பலன்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | பயணம் மற்றும் குடியேற்ற பலன்கள் |
பயணம் மற்றும் குடியேற்ற பலன்கள்
குரு உங்கள் ராசியின் 4 மற்றும் 5ஆம் வீட்டில் இந்த ஆண்டு முழுவதும் சஞ்சரிப்பதால் நீங்கள் வெளிநாட்டுப் பயணம் செய்யும் வாய்ப்பு உள்ளது. அது சுற்றுலா அல்லது தொழில் காரணமான பயணமாக இருக்கலாம். ஆனால், அர்தஷ்டம சனி நடப்பதால், அத்தகைய பயணம் உங்களுக்கு கடுமையான ஒன்றாக மாறிவிடலாம். ராகு / கேது பெயர்ச்சி பயணத்தின் போது உங்களுக்கு தனிமையை உண்டாகலாம், மேலும் ஏமாற்றங்களையும் உண்டாக்கலாம்.
சரியான தங்கும் வசதி இல்லாததால் உங்கள் பயண செலவுகள் அதிகமாக இருக்கும். பாகம் 1 மற்றும் 3-ல் போதிய உதவிகள் கிடைக்காததால் வெளிநாட்டில் நீங்கள் இன்னல்களை சந்திக்க நேரலாம். உங்கள் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் தேக்கம் அடையலாம்.
குரு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் பாகம் 2 மற்றும் 4-ல் சஞ்சரிக்கும் போது பயணத்தால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். உங்கள் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் ஒப்புதல் பெரும். ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளில் நிரந்தர குடியுரிமைப் பெற விண்ணப்பிக்கலாம். இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொண்டு நீங்கள் விசா ஸ்டம்பிங் செய்ய உங்கள் தாய்நாடு செல்லலாம்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021
Prev Topic
Next Topic