2021 புத்தாண்டு வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Thula Rasi (துலா ராசி)

வேலை / உத்தியோகம்


ராகு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிலும், கேது 2ஆம் வீட்டிலும், மற்றும் சனி பகவான் 4ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இது சவால் நிறைந்த காலமாக இருக்கும். அதிக வேலை பளு இருக்கும். நீங்கள் 24/7 வேலை பார்த்தாலும், உங்கள் மேலாளரை மகிழ்ச்சி அடையச் செய்ய முடியாது. மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்ற எந்த பலனையும் உங்களால் எதிர்பார்க்க முடியாது. உங்களது ஆண்டு அறிக்கை உங்களுக்கு ஏமாற்றம் தரக்கூடியதாக இருக்கும். உங்களுக்குடன் வேலை பார்ப்பவர்கள் மற்றும் முதலாளியுடன் உங்களுக்கு கடுமையான வாக்குவாதங்கள் ஏற்படலாம். புது வேலை வாய்ப்பிற்கு முயற்சிக்க இது ஏற்ற நேரம் இல்லை.
ஆனால் ஏப்ரல் 5, 2021க்கு மேல் இரண்டாம் பாகத்தை நீங்கள் அடைந்ததும், உங்களுக்கு குருவிடம் இருந்து பெரும் அளவு உதவி கிடைக்கும். உங்கள வேலை பளு குறையும். தற்போது உங்களுக்கு இருக்கும் உத்தியோகத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்றால், புது வேலை வாய்ப்பிற்கு முயற்சி செய்ய இது நல்ல நேரம். ஜூன் 2௦, 2021க்குள் நீங்கள் செட்டிலாகி விடுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் ஜூன் 2௦, 2021 முதல் அடுத்த ஐந்து மாதங்களுக்கு உங்களால் நல்ல பலனை எதிர்பார்க்க முடியாது. இது குறிப்பாக குரு வக்கிர கதி அடைந்து மீண்டும் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிற்கு பெயருவதாலும், அர்தஷ்டம சனியின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்குவதாலும் ஏற்படும்.
நவம்பர் 2௦, 2021 முதல் இறுதி பாகத்தில் இருந்து உங்களுக்கு நல்ல பலன்கள் நடக்கத் தொடங்கும். இறுதி பாகத்தில் உங்களுக்கு சிறப்பான நிதி சன்மானங்கள் உண்டாகும். அடுத்த நிலைக்கு உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஆனால் கடுமையான அரசியல் நிலவும். உங்களுக்கு எதிரான அரசியலை நீங்கள் சிறப்பாக சமாளிப்பீர்கள். வெளிநாட்டு பயணம் செய்யும் வாய்ப்பும் உங்களுக்கு உண்டாகும். மொத்தத்தில் இந்த 2021ஆம் ஆண்டு உங்கள் உத்தியோக வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் போல இருக்கும்.


முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021




Prev Topic

Next Topic