![]() | 2021 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
உங்கள் மனைவி/கணவன், உறவினர்கள் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் உறவு இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக இருக்கும். உங்கள் மனைவி/கணவன் உங்கள் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வருவார்கள். உங்கள் மகன் மற்றும் மகளின் திருமணத்தை நிச்சயம் செய்ய இது ஏற்ற காலம். இந்த 2021ஆம் ஆண்டு சுப காரியங்கள் நடத்துவதில் வெற்றிப் பெறுவீர்கள்.
உங்கள் குடும்பத்தில் குழந்தை பிறப்பதால் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குறுகிய தூர பயணம் அல்லது வெளிநாட்டிற்கு இடமாற்றம் செய்வீர்கள். உங்கள் கடந்த காலத்தில் உங்களை மதிக்காத உங்கள் உறவினர்கள் தற்போது உங்களுடன் மீண்டும் உறவை புதுப்பித்துக் கொள்ள முயற்சி செய்வார்கள். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல புகழையும், பெயரையும் பெரும். உங்களால் முடிந்த தானம் தர்மம் செய்ய முயற்சி செய்யுங்கள்.
Prev Topic
Next Topic