![]() | 2021 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
இந்த ஆண்டு முக்கிய கிரகங்கள் அனேக நேரங்களில் நல்ல நிலையில் சஞ்சரிபப்தால் ஒரு பொற்காலமாக இருக்கும். ராகு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு பண மழையைப் பொலியச் செய்வார். சனி பகவான் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து நீண்ட கால வளர்ச்சிக்கு உதவியாக இருப்பார். குரு உங்கள் ராசியின் 11ஆம் சஞ்சரித்து உங்களுக்கு நீச்ச பங்க ராஜ யோகத்தை தந்து உங்கள் அதிர்ஷ்டத்தை பல மடங்கு அதிகரிப்பார். உங்கள் வருமானம் அதிகரிக்கும். பண வரத்து பல வழிகளில் இருந்து வரும்.
வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் நீங்கள் நல்ல பணத்தை பார்க்கலாம். உங்கள் நிதி நிலை இந்த 2021ஆம் ஆண்டு முன்னேற்றம் அடைந்து கொண்டே இருக்கும். உங்கள் கடன் பிரச்சனைகளில் இருந்து முற்றிலுமாக வெளி வந்து விடுவீர்கள். உங்கள் கிரெடிட் மதிப்பு அதிகரிக்கும். உங்கள் சேமிப்பில் இருக்கும் பணம் அதிகரித்துக் கொண்டே போகும். வங்கிக் கடன் குறைந்த வட்டி விகிதத்திற்கு எந்த சிக்கலும் இன்றி ஒப்புதல் பெரும்.
தேவையற்ற எந்த மருத்துவ மற்றும் பயண செலவுகளும் இருக்காது. உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதால் நீங்கள் அதிக பாதுகாப்பாக உணருவீர்கள். உங்களால் இந்த 2021ஆம் ஆண்டு எளிதாக புது வீடு வாங்க முடியும். உங்கள் கனவு இல்லத்திற்கு குடிபெயருவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புது வாகனம் வாங்கி உங்கள் சௌகரியத்தை அதிகரித்துக் கொள்ள இது நல்ல நேரம்.
Prev Topic
Next Topic