2021 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி)

ஜனவரி 1, 2021 முதல் ஏப்ரல் 05, 2021 வரை பண மழை (100 / 100)


ராகு, கேது, குரு, மற்றும் சனி பகவான் நல்ல நிலையில் சஞ்சரித்து உங்களுக்கு பண மழையை பொழிவதால் இது உங்களுக்கு ஒரு பொற்காலமாக இருக்கும். உங்களுக்கு மன நிம்மதி உண்டாகும். உங்கள் வாழ்க்கை பயணம் சுமூகமாக இருக்கும். உங்கள் உடல் நலம் அதிகரிக்கும். இதனால் உங்கள் வாழ்க்கையில் நல்ல சௌகரியமாக இருப்பீர்கள். குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. உங்கள் குழந்தைகள் உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வருவதால், நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். காதலர்கள் தங்கள் பெற்றோர்கள் காதல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பதால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நீண்ட காலமாக குழந்தை பேறுக்காக காத்திருந்த தம்பதியினர் அதற்கான பாக்கியத்தைப் பெறுவார்கள்.
நல்ல சம்பளம், பதவி மற்றும் பலன்களோடு பெரிய நிறுவனத்தில் இருந்து உங்களுக்கு சிறப்பான் வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்களுக்கு அடுத்த நிலைக்கு பதவி உயர்வு கிடைத்தாலும், அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. உங்கள் உத்தியோக வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தொழிலதிபர்கள் அதிகரிக்கும் பண வரத்தால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்களது தொடக்கநிலை தொழில் நலல் முன்னேற்றம் பெரும். இதனால் ஒரே இரவில் நீங்கள் பணக்காரராகும் வாய்ப்பும் உள்ளது.



உங்களுக்கு பண மழை உண்டாகும். புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம். பங்கு சந்தை முதலீடுகள் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும். சூதாட்டம், அதிர்ஷ்ட சீட்டு மற்றும் ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் போன்றவற்றை முயற்சி செய்யலாம். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் இந்த காலகட்டத்தில் பணக்காரராக ஆவீர்கள். விசா மற்றும் குடியேற்றம் குறித்த விடயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.




Prev Topic

Next Topic