2021 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி)

ஏப்ரல் 05, 2021 முதல் செப்டம்பர் 14, 2021 வரை மிதமான பின்னடைவு (45 / 100)


குரு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து தஹிக செலவுகளையும், தாமதங்களையும் உண்டாக்குவார். ஆனால் சனி பகவான் மற்றும் ராகு தொடர்ந்து உங்களுக்கு நல்ல பலனைத் தருவார். உங்களால் உங்கள் உடல் நலத்தை நல்ல நிலையில் வைத்திருக்க முடியும், ஆனால் உங்கள் மனைவி/கணவன் அல்லது குழந்தைகளின் உடல் நலம் சற்று பாதிக்கலாம். நீங்கள் போதிய மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பாக காலகட்டத்தில் சுப காரியங்கள் நடத்துவது நல்ல யோசனையாக இருக்காது. காதலர்கள் தங்கள் காதல் வாழ்க்கையில் கடினமான சூழலை சந்திப்பார்கள். உங்கள் பெற்றோர்களிடம் இருந்து காதல் திருமணத்திற்கு சம்மதம் பெறுவது சற்று கடினமான ஒன்றாக இருக்கலாம்.
உங்கள் வேலை பளு சும்மாராக இருக்கும். உங்களுக்கு இந்த பாக காலகட்டத்தில் தேவையற்ற பயம் மற்றும் பதற்றம் ஏற்படலாம். தொழிலதிபர்கள் எந்த அதிர்ஷ்டத்தையும் காண முடியாது. முடிந்த வரை பயணம் செய்வதை தவிர்த்து விடுவது நல்லது. நீங்கள் எதை செய்தாலும், அதில் தேக்க நிலை ஏற்படலாம். நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகலாம். இந்த பாக காலகட்டத்தில் நீங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும். பங்கு சந்தை முதலீடுகளில் உங்களுக்கு இழப்புகள் ஏற்படலாம்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic