![]() | 2021 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | மூன்றாம் பாகம் |
செப்டம்பர் 14, 2021 முதல் நவம்பர் 20, 2021 வரை பொற்காலம் (100 / 100)
இது உங்களுக்கு மற்றுமொரு பொற்காலமாக இருக்கும். குரு, மற்றும் சனி பகவான் இணைந்து உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து நீச்ச பங்க ராஜ யோகத்தை உங்களுக்கு உண்டாக்குகிறார்கள். கடந்த மாதங்களில் நீங்கள் செய்த கடின உழைப்பிற்கு ஏற்ற நல்ல பலன் இப்போது கிடைக்கும். உங்கள் உடல் நலம் சீராக இருக்கும், உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
உங்கள் குடும்பத்தினர்கள் உங்கள் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிப்பதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புது வீடு வங்கி குடி பெயர இது நல்ல நேரம். சமுதாயத்தில் நல்ல புகழும் பெயரும் பெறுவீர்கள் . உங்கள் குடும்பத்தில் குழந்தை பிறப்பதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
அலுவலகத்தில் நல்ல பாராட்டுகளைப் பெறுவீர்கள். அடுத்த நிலைக்கு சிறப்பான சம்பளத்தோடு உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இந்த பாகத்தில் உங்களக்கு நல்ல வேலை வாய்ப்பும் கிடைக்கும். தொழிலதிபர்கள் சிறப்பான லாபம் காண்பார்கள். உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். பங்கு சந்தை வர்த்தகத்தில் விண்ணைத் தொடும் லாபம் காண்பீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் புது வீடு வாங்கி குடி பெயர முயற்சிக்கலாம்.
Prev Topic
Next Topic



















