![]() | 2021 புத்தாண்டு தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் |
தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்
குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து தொழிலதிபர்களுக்கு சிறப்பான வளர்ச்சியைத் தருவார். நீங்கள் ஜென்ம சனியில் இருந்து வெளியில் வந்து விட்டதால், நீண்ட காலமாக இருந்த மோசமான காலகட்டம் உங்களுக்கு முடிந்து விட்டது. பாகம் 1 மற்றும் 3-ல் நீங்கள் நல்ல அதிர்ஷ்டத்தை காண்பீர்கள். உங்கள் வகிக் கடன் ஒப்புதல் பெரும். உங்கள் தொழிலை தொடர்ந்து நடத்த உங்களுக்கு புது ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும். உங்கள் போட்டியாளர்களை எதிர்த்து நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்கள் கடன் பிரச்சனைகள் குறையும். உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
ஆனால் பாகம் 2 மற்றும் 4-ல் நீங்கள் அதிக சவால்களை சந்திப்பீர்கள். குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் வளர்ச்சியை மோசமாக பாதிப்பார். உங்கள் மறைமுக எதிரிகள் உங்கள் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் பலம் பெறுவார்கள். சனி பகவான் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு பல இழப்பை ஏற்படுத்துவார். ஆனால், ராகு நல்ல நிலையில் இந்த ஆண்டு முழுவதும் சஞ்சரிப்பதால், உங்கள் செல்வாக்கு நல்ல நிலையில் இருக்கும். பாகம் 2 மற்றும் 4-ல் யாருக்கும் பணம் கொடுப்பதை அல்லது கடன் வாங்குவதை முடிந்த வரை தவிர்த்து விடுவது நல்லது.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021
Prev Topic
Next Topic