2021 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி)

நிதி / பணம்


நவம்பர் 2௦, 202௦ வரை குரு உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்ததால் நீங்கள் நிதி இழப்புகளை சந்தித்த்திருந்திருப்பீர்கள். தற்போது விடயங்கள் உங்களுக்கு சாதகமாக மாறும். இந்த 2021ஆம் ஆண்டு நீங்கள் நல்ல அதிர்ஷ்டத்தை காண்பீர்கள். உங்கள் நிதி நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் உங்கள் கடனை விரைவாக அடைப்பீர்கள். உங்கள் வங்கிக் கடன் எந்த சிக்கலும் இன்றி ஒப்புதல் பெரும். புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம்.
பாகம் 1 மற்றும் 3-ல் குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரிப்பதன் பலத்தால் உங்கள் நிதி நிலை உங்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் நீங்கள் சொத்துக்களில் முதலீடுகள் செய்வீர்கள். அதன் மூலம் உங்களுக்கு வருமானமும் வரும். ராகு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் வளர்ச்சி மற்றும் வெற்றியை அதிகரிப்பர்.
குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிற்கு பாகம் 2 மற்றும் 4-ல் பெயர்ந்ததும் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் சேமிப்பு கணக்கில் இருக்கும் பணம் விரைவாக கரையும். இருப்பினும் விடயக்னால் கடந்த 202௦ போல மோசமாகிறது. நீங்கள் பாகம் 2 மற்றும் 4-ல் கவனமாக இருக்க வேண்டும். இந்த 2021ஆம் ஆண்டு உங்களுக்கு ஒரு பொற்காலமாக இருக்கும்.


முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021




Prev Topic

Next Topic