2021 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி)

ஜனவரி 1, 2021 முதல் ஏப்ரல் 14, 2021 வரை நல்ல அதிர்ஷ்டம் (85 / 100)


ராகு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிலும், கேது 12ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பார்கள். இதனால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். குரு மற்றும் சனி பகவான் இணைந்து உங்களுக்கு நீச்ச பங்க ராஜ யோகத்தை உண்டாக்குவார்கள். உங்கள் வளர்ச்சி மற்றும் நிவாரணத்தின் அளவு உங்கள் பிறந்த சாதக பலனை பொறுத்தே இருக்கும்.
இந்த பாகத்தை நீங்கள் அடைந்ததும், கடந்த மோசமான சம்பவங்களில் இருந்து வெளிவர முயற்சிப்பீர்கள். உங்கள் உடல் நல பிரச்சனைகள் மற்றும் மன வலி போன்றவற்றில் இருந்து வெளிவரத் தொடங்குவீர்கள். நீங்கள் நேசிப்பவர்களின் உடல் நலத்தில் பெரும் அளவு முன்னேற்றம் ஏற்படும். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் குறையும். காதலர்கள் மன உலைச்சல்களில் இருந்து வெளி வருவார்கள். கடந்த மாதங்களில் உங்களுக்கு அவப்பெயர் ஏற்பட்டிருந்தால், நீங்கள் உங்கள் மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் முயற்சிகளை எடுப்பீர்கள்.


உங்களுக்கு தற்போது வேலை இல்லாமல் இருந்தால், புது வேலைக்கான முயற்சிகள் எடுக்க இது நல்ல நேரம். சிறப்பான சம்பளத்தோடு உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்கள் நிதி நிலையில் பெரும் அளவு முனேற்றம் ஏற்படும். விசா மற்றும் குடியேற்றம் குறித்த விடயங்களில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். மூச்சு பயிற்சி செய்து விரைவாக நேர்மறை சக்திகளைப் பெறுங்கள். பங்கு சந்தை வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் நல்ல லாபம் பெறுவீர்கள்.


Prev Topic

Next Topic