2021 புத்தாண்டு உடல் நலம் ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி)

உடல் நலம்


ராகு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் சக்தியின் அளவை அதிகரிப்பார். நீங்கள் நீண்ட நேரம் மற்றும் வார இறுதியில் வேலை பார்த்தாலும் சோர்வடைய மாட்டீர்கள். குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் பாகம் 1 மற்றும் 3-ல் சஞ்சரித்து உங்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனைகளையும் எளிமையான மருந்துகளால் குணமாக்க உதவுவார். உங்கள் மனைவி/கணவன், குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் மருத்துவ செலவுகள் குறையும். உங்கள் உடலில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பு சத்தின் அளவு சீரான நிலைக்கு வரும்.
ஆனால் குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிற்கு பாகம் 2 மற்றும் 4-ல் பெயர்ந்த பிறகு உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். உங்கள் மனைவி/கணவன் மற்றும் குழந்தைகளின் உடல் நலம் நவம்பர் 2௦, 2021க்கு மேல் பாதிக்கப்படலாம். இந்த ஆண்டு போதிய மருத்துவ காப்பீடுகளை எடுத்துக் கொள்வதை உறுதி செய்து கொள்ளுங்கள். சுதர்சன மகா மந்திரம் மற்றும் ஹனுமான் சாலிசா கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும்.


முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021


நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021


Prev Topic

Next Topic