2021 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி)

கண்ணோட்டம்


ஜனவரி 2021 தனுசு ராசி பலன்கள்
இந்த 2021ஆம் புத்தாண்டின் தொடக்கத்தில் குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிலும், ராகு 6ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பார்கள். இந்த ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். சனி பகவான் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிலும், கேது உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு கலவையான பலன்களைத் தருவார்.
குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் ஜணைரி 1, 2021 முதல் ஏப்ரல் 5, 2021 வரை முதல் பாகத்டிஹ்ல் சஞ்சரித்து உங்கள் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தை தருவார்கள். இந்த காலகட்டத்தில் சுப காரியங்கள் நடத்துவதில் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். ராகு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் வளர்ச்சியையும், வெற்றியையும் அதிகரிப்பார். ஏப்ரல் 5, 2021 முதல் ஜூன் 2௦, 2021 வரையிலான காலகட்டத்தில் குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் போது நீங்கள் அதிகம் சவால்களை சந்திப்பீர்கள். உங்கள் உத்தியோக வளர்ச்சி பாதிக்கக் கூடும்.
ஜூன் 2௦, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரையிலான 3ஆம் பாக காலகட்டத்தில் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். உங்கள் வளர்ச்சி மீண்டும் இந்த பாகத்தில் குரு வக்கிர கதி அடைந்து உங்கள் ராசியின் இரண்டாம் வீட்டிற்கு பெயருகிறார்.


குரு நவம்பர் 2௦, 2021 முதல் டிசம்பர் 31, 2021 வரையிலான நான்காம் பாக காலகட்டாத்தில் முனோக்கி பெயர்ந்து கும்ப ராசியில் சஞ்சரிப்பார். இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் அதிக சவால்கள் உண்டாகும். இந்த ஆண்டை நான் நான்கு பாகங்களாக பிரித்து, பலன்களை எழுதியுள்ளேன். பாகம் 1 மற்றும் 3ஐ பயன்படுத்தி நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். ஆனால் பாகம் 2 மற்றும் 4-ல் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021


மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021


Prev Topic

Next Topic