![]() | 2021 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | மூன்றாம் பாகம் |
ஜூன் 20, 2021 முதல் நவம்பர் 20, 2021 வரை நல்ல மாற்றங்கள் (70 / 100)
குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் வக்கிர கதி அடைந்து மீண்டும் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிற்கு பெயருகிறார். குரு மற்றும் சனி பகவான் இணைந்து சஞ்சரித்து மீண்டும் நேர்மறை மாற்றங்களை உண்டாக்குகிறார்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் உடல் நலம் சிறப்பாக இருக்கும். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்வீர்கள். உங்கள் குடும்பத்தினர்கள் உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். சுப காரியங்கள் நடத்த இது நல்ல நேரம். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வருவார்கள். அது உங்களை பெருமை அடையச் செய்யும்.
உங்கள் வேலை பளு குறையும். அலுவலக வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். நல்ல நிதி சன்மானங்கள் பெறுவீர்கள். அடுத்த நிலைக்கு உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சனி பகவான் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் வக்கிர நிவர்த்தி அடைவதால், உங்கள் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் வருமானம் அதிகரித்தாலும், உங்கள் நிதி தேவைகளும் அதிகரிக்கும். பயணம் ஆடம்பர பொருட்கள் வாங்குவது மற்றும் வீட்டை அழகுபடுத்துவது போன்ற காரணங்களால் உங்களுக்கு விரைய செலவுகள் அதிகரிக்கும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் பங்கு சந்தை வர்த்தகம் உங்களுக்கு லாபம் தரும் வகையில் இருக்கும். பயணம் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நல்ல பலனைத் தரும். விசா மற்றும் குடியேற்ற பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic