![]() | 2021 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடுகள் |
வர்த்தகம் மற்றும் முதலீடுகள்
உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், 202௦-லிலேயே உங்களது மோசமான காலகட்டத்தை நீங்கள் கடந்து விட்டீர்கள் என்பது தான். பங்கு சந்தையில் நீண்ட கால முதலீடுகள் செய்பவர்கள் இந்த 2021ஆம் ஆண்டு சிறப்பாக செயல்படுவார்கள். கடந்த ஆண்டு உங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை இந்த ஆண்டு நீங்கள் மீட்டெடுப்பீர்கள். உங்கள் வளர்ச்சி மற்றும் நிவாரணத்தின் அளவு உங்கள் பிறந்த சாதகத்தை பொறுத்தே உள்ளது. உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், பாகம் 1 மற்றும் 3-ல் நீங்கள் நல்ல லாபத்தை காண்பீர்கள். ரியல் எஸ்டேட் முதலீடுகள் செய்யலாம். வீடு வாங்கி குடி பெயரும் முயற்சியில் நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள். இன்சூரன்ஸ் மற்றும் வழக்கு போன்ற விடயங்களில் உங்களுக்கு நல்ல செட்டில்மென்ட் கிடைக்கும்.
பாகம் 2 மற்றும் 4-ல் முதலீடுகள் குறித்த விடயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால், உங்கள் முதலீடுகளால் உங்களுக்கு நட்டம் ஏற்படலாம். பாகம் 2 மற்றும் 4-ல் நீங்கள் பங்கு சந்தை வர்த்தகத்தை முற்றிலுமாக தவிர்த்து விடுவது நல்லது. குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் போது ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளை தவிர்த்து விடுவது நல்லது. பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றப்படலாம். வங்கிக் கடன் வாங்க உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சுருட்டி கொடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021
Prev Topic
Next Topic