2021 புத்தாண்டு வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி)

வேலை / உத்தியோகம்


குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இந்த புத்தாண்டு உங்களுக்கு நல்ல பலன்களோடு தொடங்கும். உங்கள் வேலை பளு மற்றும் பதற்றம் குறையும். நீண்ட காலமாக நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு ராகு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதன் பலத்தால் கிடைக்கும். நீங்கள் புதிய வேலை வாய்ப்பிற்கு முயற்சி செய்தால், பெரிய நிறுவனத்தில் இருந்து உங்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏப்ரல் 5, 2021 வரை பாகம் 1-ல் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். இதே போன்ற பலனை நீங்கள் பாகம் 3-லும் பெறுவீர்கள். நீங்கள் ஒப்பந்தம் ரீதியாக வேலை பார்கின்றீர்கள் என்றால், அது உங்களுக்கு தற்போது நிரந்தரமாகும்.
ஆனால் பாகம் 2 மற்றும் 4-ல் குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிற்கு பெயரும் போது நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில், குறிப்பாக நிர்வாகத்தில் இருந்து அதிகப்படியான அரசியல் உங்கள் அலுவலகத்தில் நடக்கும். நீங்கள் பதவி உயர்வை எதிர்பார்த்தால், அது சில சதிகளால் தாமதமாகலாம். உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் உங்களது வளர்ச்சி மற்றும் வெற்றியைக் கண்டு பொறாமைப் படுவார்கள். உங்கள் மறைமுக எதிரிகளால் உங்களுக்கு அதிக பிரச்சனைகள் ஏற்படலாம். உங்களது செயல்திறனைக் கண்டு உங்கள் முதலாளி மகிழ்ச்சி அடைய மாட்டார். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உங்கள் முதலாளியுடன் நீங்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட நேரலாம். பாகம் 2 மற்றும் 4-ல் நீங்கள் பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.



முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021




நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021


Prev Topic

Next Topic