![]() | 2021 புத்தாண்டு தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் |
தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்
சனி பகவான் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பதன் பலத்தால், தொழிலதிபர்கள் நீண்ட கால குறிக்கோள்களில் வெற்றிப் பெறுவார்கள். இருப்பினும், இந்த 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விடயங்கள் சிறப்பாக நடக்காமல் போகலாம். உங்கள் போட்டியாளர்களிடம் இருந்து உங்களுக்கு அதிக அழுத்தம் ஏற்படலாம். ராகு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் மறைமுக எதிரிகள் உங்கள் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் உங்களுக்கு எதிரான சாதிகள் செய்வார்கள். ஆனால் சனி பகவான் இந்த 2021ஆம் ஆண்டு நல்ல நிலையில் சஞ்சரிப்பதால் அவர்கள் தோல்வி அடைவார்கள்.
ஏப்ரல் 5, 2021 முதல் ஜூன் 2௦, 2021 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் உங்களுக்கு ஏற்பட்ட தடைகளில் இருந்து வெளி வந்து பெரும் அளவு வெற்றிப் பெறுவீர்கள். உங்கள் லாபம் அதிகரிப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பாகம் 3-ல் குரு வக்கிர கதி அடைவதால் மற்றுமொரு பின்னடைவு உங்களுக்கு ஏற்படலாம்.
நவம்பர் 2௦, 2021 வாக்கில் உங்களுக்கு மீண்டும் நல்ல பலன் உண்டாகும். உங்கள் வங்கிக் கடன் எந்த சிக்கலும் இன்றி ஒப்புதல் பெரும். உங்கள் தொழிலை விரிவுபடுத்த இது நல்ல நேரம். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் நீங்கள் ஒரு தொடக்க நிலை தொழிலை எடுத்து நடத்துவீர்கள். ஒரே இரவில் நீங்கள் பணக்காரராகவும் ஆவீர்கள். ரியல் எஸ்டேட் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் தங்களுக்கு கிடைக்கும் நிதி சன்மானன்களால் மகிழ்ச்சி அடைவார்கள்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021
Prev Topic
Next Topic