![]() | 2021 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
ராகு மற்றும் கேது உங்கள் குடும்பத்தினர்களுடன் இருக்கும் உறவில் அதிக பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும். எதிர்பாராவிதமாக குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் நிலையை மேலும் மோசமாக்கக் கூடும், உங்கள் மனைவி/கணவன் மற்றும் குடும்பத்தினர்களுடன் உங்களுக்கு தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். உங்கள் குழந்தைகள் உங்களிடம் புதிய தேவைகளை முன் வைத்து உங்களை ஆச்சரியப்படுத்துவார்கள். குடும்பத்தில் அதிகரிக்கும் பிரச்சனைகள் உங்கள் மன நிம்மதியை எடுத்து விடக் கூடும். சனி பகவான் பாகம் 1-ல் உங்களுக்கு பெரிதாக எந்த உதவியும் செய்ய மாட்டார்.
பாகம் 2-ல் குரு முன்னோக்கி உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிற்கு பெயர்ந்ததும் உங்களுக்கு சிறப்பான நிவாரணம் கிடைக்கும். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது நல்ல நேரம். சுப காரியங்கள் நடத்துவதில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பாகம் 3-ல் குரு வக்கிர கதி அடைந்து மீண்டும் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிற்கு பெயரும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் மறைமுக எதிரிகளால் உங்களுக்கு எதிரான சதிகள் உண்டாகும். முக்கிய முடிவுகள் எடுக்கும் முன் நீங்கள் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்பட வேண்டும். சனி பகவானும் எப்போதும் விடயங்கள் உங்கள் கட்டுப்பாட்டை மீறி போகாமல் பார்த்துக் கொள்வார்.
குரு முனோக்கி உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிற்கு பாகம் 4-ல் பெயர்ந்த பின், உங்களுக்கு சிறப்பான பலன்கள் உண்டாகும். உங்கள் மறைமுக எதிரிகளை கண்டறிந்து நீங்கள் அவர்களை விட்டு விலகி விடுவீர்கள். உங்கள் மனைவி/கணவன் உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள். உங்கள் சமூக வட்டாரத்தில் டிசம்பர் 2021 வாக்கில் நல்ல மதிப்பு கிடைக்கும்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021
Prev Topic
Next Topic