![]() | 2021 புத்தாண்டு உடல் நலம் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | உடல் நலம் |
உடல் நலம்
குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிலும், ராகு 7ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால், உங்கள் உடல் நலம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாதிக்கப்படலாம். உங்கள் உடல் உபாதைகள் அதிகமாக இருக்கும். எதிர்பாராவிதமாக உங்கள் உடல் நல பிரச்சனைகள் சிறிய அறிகுறிகள் இருந்தாலும், அதிகரிக்கக் கூடும். இந்த ஆண்டு சனி பகவான் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பதன் பலத்தால் ஆயுர்வேத விதியும் உங்களுக்கு நல்ல பலனளிக்கும்.
நீங்கள் இரண்டாம் பாகத்தை அடைந்ததும் உங்கள் உடல் நலம் அதிகரிக்கும். உங்கள் குடும்பத்தினர்களின் உடல் நலத்தில் பெரும் அளவு முன்னேற்றம் ஏற்படும். உங்கள் மருத்துவ செலவுகள் குறையும். உடற் பயிற்சி மற்றும் வெளிப்புற வேலைகள் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் உடலில் இருக்கும் கொழுப்பு சத்து மற்றும் சர்க்கரையின் அளவு சீரான நிலைக்கு வரும்.
மீண்டும் குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிற்கு பெயர்ந்து வக்கிர கதி அடையும் போது சில பின்னடைவுகள் ஏற்படும். நீங்கள் சரியான உணவு பழக்கங்களை பின்பற்றி, உடற் பயிற்சி செய்து உங்கள் உடல் நலத்தை சீராக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். நவம்பர் 2௦, 2021-ஐ அடைந்ததும் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஹனுமான் சாலிச கேட்பதால் உங்கள் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படலாம்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021
Prev Topic
Next Topic