![]() | 2021 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | காதல் |
காதல்
நீங்கள் யாரையாவது விரும்புகின்றீர்கள் என்றால், இந்த ஆண்டு ஏற்ற இறக்கத்தோடு கலவையான பலன்களைப் பெறுவீர்கள். பாகம் 1 மற்றும் 3-ல் நீங்கள் விரும்புபவருடன் உங்களுக்கு சண்டைகள் ஏற்பட்டு உங்கள் காதல் வாழ்க்கை பாதிக்கப்படலாம். ராகு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு கசப்பான அனுபவங்களை உண்டாக்குவார். மேலும் உங்களுக்கு வேறு மதம், இனம் அல்லது சாதியைச் சேர்ந்தவர் மீது ஈர்ப்பு உண்டாகலாம்.
உங்கள் காதல் விடயத்தால் இரு தரப்பு குடும்பத்தினர்களுக்கும் இடையே சண்டைகள் ஏற்படலாம். திருமணம் ஆன தம்பதினர் கடுமையான நேரத்தை காண்பார்கள். நீங்கள் ஆணாக இருந்தால், குழந்தை பேறுக்கு திட்டமிடலாம், நீங்கள் பெண்ணாக இருந்தால், ஏப்ரல் 5, 2021 வரை உங்கள் உடல் நலத்தின் மீது நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
பாகம் 2 மற்றும் 4-ல் விடயங்கள் இலகுவாகும். குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிற்கு பெயர்ந்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். சனி பகவான் நல்ல நிலையில் இந்த ஆண்டு முழுவதும் சஞ்சரிப்பார். இந்த சஞ்சாரத்தால் பாகம் 2 மற்றும் 4-ல் உங்கள் அதிர்ஷ்டம் பல மடங்கு அதிகரிக்கும். உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிப்பார்கள். திருமணம் ஆன தம்பதியினர் நல்ல அன்யுனியதோடு இருப்பார்கள். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், ஏப்ரல் 5, 2021 வரை காத்திருந்து அதன் பின்னர் உங்களுக்கு ஏற்ற வரனை பார்க்க முயற்சிக்கலாம். பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021
Prev Topic
Next Topic