![]() | 2021 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
2021 புத்தாண்டு பலன்கள் – விருச்சிக ராசி
ராகு களத்திற ஸ்தானத்திலும், கேது ஜென்ம ராசியிலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சஞ்சரித்து உங்களுக்கு பிரச்சனைகளை உண்டாக்குவார்கள். குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை. உங்களுக்கு அதிக சவால்கள் உண்டாகலாம் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். உங்களுக்கு ஒரு நல்ல செதிஹி என்னவென்றால், இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பது தான். சனி பகவான் விடயங்கள் உங்கள் கட்டுப்பாட்டை மீறி போவதற்கு முன், அதனை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவார்.
குரு சனி பகவானோடு பாகம் 1 மற்றும் 3-ல் இணைந்து சஞ்சரித்து உங்களுக்கு கசப்பான அனுபவங்களை உண்டாக்குவார்கள். குருவின் தாக்கத்தால், சனி பகவான் உங்களுக்கு தரக்கூடிய நற்பலன்கள் பாதிக்கப்படலாம், மேலும் ராகுவின் தாக்கம் பாகம் 1 மற்றும் 3-ல் அதிகமாக இருக்கும். உங்கள் உடல் நலம் மற்றும் உங்கள் மனைவி/கணவனுடன் இருக்கும் உறவு பாதிக்கப்படலாம். அதிக வேலை பளுவும், நிதி பிரச்சனைகளும் இருக்கும்.
பாகம் 2 மற்றும் 4-ல் குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் போது விடயங்கள் இலகுவாகி உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் நீண்ட கால முதலீடுகள் செய்யலாம். வெளிநாட்டுப் பயணம் செய்யும் வாய்ப்பு பலமாக உள்ளது. மொத்தத்தில் நல்ல மற்றும் சாதகமற்ற இரண்டு கலவையான பலன்களையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனால் சனி பகவான் பலம் பெற்று இருப்பதால் நல்ல பலன்கள் சாதகமற்ற பலனை விட அதிகமாகவே இருக்கும். மூச்சு பயிற்சி செய்து நீங்கள் நேர்மறை சக்திகளை அதிகரித்துக் கொள்ள முயற்சிக்கலாம்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021
Prev Topic
Next Topic