![]() | 2021 புத்தாண்டு திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் |
திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள்
திரைநட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகத்தர்கள் மற்றும் அரசியலில் இருப்பவர்கள் சீரான வளர்ச்சி மற்றும் வெற்றியை நீண்ட கால அடிப்படையில் பெறுவார்கள். ஆனால் பாகம் 1 மற்றும் 3-ல் ஒரு குறுகிய காலத்திற்கு உங்களுக்கு சில பின்னடைவுகள் ஏற்படலாம். நிதி பிரச்சனைகள் அல்லது உங்களுடன் வேலை பார்ப்பவர்களுடன் உங்களுக்கு ஏற்படும் சண்டைகள் காரணமாக விடயங்கள் தேக்கம் அடையலாம். உங்கள் படத்தை இந்த காலகட்டத்தில் வெளியிடுவது நல்ல யோசனையாக இருக்காது. அப்படியே வெளியீடு தாமதமானாலும், அது நல்ல காரணத்திற்காகவே இருக்கும்.
பாகம் 2 மற்றும் 4-ல் குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து பலம் பெரும் போது நீங்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். உங்கள் புகழும், ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆனால் நீங்கள் நல்ல உற்சாகத்தோடு இருப்பதால் மக்களும், ஊடகங்களும் உங்களை நோக்கி ஈர்க்கப்படும். அதிகரிக்கும் நிதி சன்மானன்களால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வருமான வரி மற்றும் சட்ட பிரச்சனைகள் ஏதாவது இருந்தால், அதில் இருந்து முற்றிலுமாக வெளி வந்து விடுவீர்கள்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021
Prev Topic
Next Topic