![]() | 2021 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | இரண்டாம் பாகம் |
ஏப்ரல் 05, 2021 முதல் ஜூன் 20, 2021 வரை நல்ல அதிர்ஷ்டம் (85 / 100)
சனி பகவான் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் பலம் பெறுவதால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் வளர்ச்சி மற்றும் வெற்றியை அதிகரிப்பார். உடல் நல பிரச்சனைகளில் இருந்து முற்றிலுமாக வெளி வந்து விடுவீர்கள். மருத்துவ செலவுகள் குறையும். உங்கள் குடும்பத்தினர்கள் உங்கள் வளர்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். சுப காரியங்கள் நடத்த இது சிறப்பான நேரம்.
அலுவலக வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். உங்கள் முதலாளி மற்றும் உடன் வேலை பார்ப்பவர்கள் உங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்கள். அடுத்தாஹ் நிலைக்கு உங்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும். புது வேலை வாய்ப்பிற்கு முயற்சிக்க இது நல்ல நேரம். இந்த பாக காலகட்டத்தில் உங்கள் நிதி நிலையில் பெரும் அளவு முன்னேற்றம் ஏற்படும். பங்குகள் பெறுவது, போனஸ் மற்றும் சம்பள உயர்வு போன்ற விடயங்கள் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும்.
வெளிநாட்டிற்கு குடிபெயர இது நல்ல நேரம். உங்கள் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் ஒப்புதல் பெரும். தொலைதூர பயணம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும். தொழிலதிபர்களுக்கு புது ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும். மேலும் இதனால் பண வரத்தும் அதிகரிக்கும். சுயதொழில் புரிவோர்கள், மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். பங்கு சந்தை வர்த்தகம் இந்த பாகத்தில் உங்களுக்கு லாபம் தரும் வகையில் இருக்கும். நீங்கள் ரியல் எஸ்டேட் முதலீடுகளையும் செய்யலாம்.
Prev Topic
Next Topic