![]() | 2021 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | மூன்றாம் பாகம் |
ஜூன் 20, 2021 முதல் நவம்பர் 20, 2021 வரை அலுவலகத்தில் அரசியல் (45 / 100)
குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் வக்கிர கதி அடைந்து மீண்டும் உங்கள ராசியின் 3ஆம் வீட்டிற்கு பெயருவார். இது உங்களுக்கு நல்ல செய்தி இல்லை. ராகு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பிரச்சனைகளை உண்டாக்குவார். சனி பகவானும் வக்கிர கதி அடைவதால் உங்களுக்கு பிரச்சனைகள் மேலும் ஏற்படலாம். உங்கள் உடல் நலம் இந்த பாக காலகட்டத்தில் பாதிக்கப்படும். உங்களுக்கு மருத்துவ செலவுகள் இருந்தாலும், அதனை நீங்கள் மருத்துவ காப்பீடு மூலம் ஈடு செய்து விடலாம்.
இந்த பாகத்தில் சுப காரியங்கள் நடத்துவதை தவிர்து விடுவது நல்லது. குடும்பத்தில் அதிகரிக்கும் அரசியல் உங்கள் மன நிம்மதியை பாதிக்கக் கூடும். அலுவலகத்தில் அரசியல் கடுமையாகும். உங்கள் முதலாளி மற்றும் உடன் வேலை பார்ப்பவர்களுடன் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் செல்வாக்கை பாதிக்கும் வகையில் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்படலாம். அலுவலகத்தில் ஏற்படும் மாற்றங்கள் உங்களுக்கு ஏமாற்றத்தை தரலாம். தொழிலதிபர்கள் தங்கள் போட்டியாளர்களால் அதிக பிரச்சனைகளை சந்திப்பார்கள். புதிய வழக்கு அல்லது வருமான வரி பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
முடிந்த வரை பயணம் செய்வதை தவிர்த்து விடுவது நல்லது. விசா மற்றும் குடியேற்றம் குறித்த விடயங்களில் எந்த அதிர்ஷ்டமும் இருக்காது. உங்கள் சேமிப்பை பாதிக்கும் வகையில் செலவுகள் அதிகரிக்கக் கூடும். யாருக்கும் முடிந்த வரை பணம் கடன் தருவது அல்லது கடன் வாங்குவதை தவிர்த்து விடுவது. பங்கு சந்தை முதலீடுகள் உங்களுக்கு பெரும் அளவு நட்டத்தை ஏற்படுத்தலாம். இந்த பாகத்தில் எந்த விதமான ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளையும் தவிர்த்து விடுவது நல்லது.
Prev Topic
Next Topic