![]() | 2021 புத்தாண்டு பயணம், வெளிநாட்டுப் பயணம் மற்றும் குடியேற்றம் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | பயணம், வெளிநாட்டுப் பயணம் மற்றும் குடியேற்றம் |
பயணம், வெளிநாட்டுப் பயணம் மற்றும் குடியேற்றம்
குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் ராகுவை ஐந்தாம் பார்வையை பார்வை இடுவதால், நீங்கள் பயணத்தில் இருக்கும் போது அதிக தனிமையை உணருவீர்கள். இதனால் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படலாம். சரியான தங்கும் வசதி கிடைக்காததால் உங்கள் பயண செலவுகள் அதிகமாக இருக்கும். பாகம் 1 மற்றும் 3-ல் உங்களுக்கு போதிய உதவிகள் கிடைக்காததாலும், சரியான தங்கும் இடம் கிடைக்காததாலும் வெளிநாட்டில் நீங்கள் அவதிப்பட நேரலாம். உங்கள் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் எந்த ஒரு சரியான காரணமும் இல்லாமல் தாமதமாகலாம்.
ஆனால் பாகம் 2 மற்றும் 4-ல் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். உங்கள் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் ஒப்புதல் பெரும். சனி பகவான் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து நிரந்தர குடியேற்றம் கிடைக்க உதவி செய்வார். ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளில் நிரந்தர குடியுரிமைப் பெற விண்ணப்பிக்க இது ஏற்ற நேரம். நீங்கள் முன்பே விண்ணப்பித்திருந்தால், உங்களுக்கு இந்த காலகட்டத்தில் விசா கிடைக்கும்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021
Prev Topic
Next Topic